” இலங்கையில் நிலையான நல்லிணக்கம் – சமத்தும் – சமாதானம் மலர வேண்டும் எனில் இது சிங்கள, பௌத்த நாடு என்ற நிலை மாற வேண்டும். இந்த விடயமே பெரும் பிரச்சினையாக உள்ளது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
” இது சிங்கள, பௌத்த நாடு என்ற நிலைப்பாட்டில் சிலர் உள்ளனர். வடக்கு, கிழக்கை இணைத்து தனி நாடு உருவாகும் என மேலும் சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர். இலங்கையென்பது தனி இனத்துக்கு உரித்தான நாடு அல்ல. தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவின மக்களும் வாழ்கின்றனர். பல்லின சமூகம் வாழும் நாடாகும். பெரும்பான்மையாக சிங்களவர்கள் வாழ்வதால் இது சிங்கள நாடாகிவிட முடியாது.” – எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
எனவே, பல்லின சமூகம் வாழும் இந்த நாடு அனைவருக்கும் உரித்தானது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாற்றம் பற்றி தற்போதாவது சிந்திக்க வேண்டும்.
மாகாணசபை முறைமையென்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல. 9 மாகாணங்களுக்கும் உரித்தானது. மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாகாணத்துக்கு பகிரப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு. தெற்கு, மேற்குக்கு அதிகாரப்பகிர்வு அவசியம். அதிகாரப்பகிர்வு என்பது ஜனநாயக பண்பாகும் – எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!