” இலங்கையின் இறையாண்மையைக் காட்டிக்கொடுத்துவிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிப்பதற்கு தயாரில்லை.” – என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஐக்கிய நாடுகள் சபையுடன் பணியாற்றும்போது அவர்களுடன் சிறப்பாக செயற்படுகின்றோம். எனினும், எமது நாட்டின் இறையாண்மையைக் காட்டிக்கொடுத்துவிட்டு, அவர்களுக்கு ஏற்ற வகையில் நாட்டை நிர்வகிக்க தயாரில்லை. இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து மக்களுக்கும் கௌரவமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கான பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. குறைப்பாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்யப்படும்.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
” தமிழ் மக்களும் இந்நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படையில் ஏனையோருக்கு உள்ள உரிமைகள் அவர்களுக்கும் அப்படியே இருக்க வேண்டும். அதேபோல அடுத்த தலைமுறையையும் பிரிவினைவாதம் நோக்கி தள்ளுவதையும் நிறுத்த வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் அனைவருக்கும் தமக்கான உரிகைளை பாதுகாத்துக்கொண்டு வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். கடமை.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றும் நாடாகும். அனைத்து நாடுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, நாட்டுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தும் வகையிலேயே வெளிவிவகாரக் கொள்கை முன்னெடுக்கப்படும். இந்தியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சிறந்த உறவு உள்ளது. மேற்குலக நாடுகளுடனும் நட்புறவு உள்ளது. கடன் மறுசீரமைப்பின்போது இந்தியா, சீனா, பளிஸ் கிபன் ஆகியவற்றின் ஆதரவு கிடைக்கப்பெற்றமை இதற்கு சிறந்த சான்றாகும். ” -எனவும் அவர் குறிப்பிட்டார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!