நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டுமெனில் தற்போதைய தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவசியம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னோடிதான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி. அன்று முதல் இன்றுவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் பிரதமர்தான் நாட்டின் தலைவர். எனவே, பிரதமரை பலப்படுத்தும் வகையிலான தேர்தல் முறைமை அவசியம்.
தற்போதைய தேர்தல் முறைமையின்கீழ், பிரேமதாச ஜனாதிபதியின் ஆட்சியின்கீழ் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க சிறு கட்சிகளின் ஆதரவை பெற வேண்டி ஏற்பட்டது.
சந்திரிக்கா அம்மையாருக்கு ஆதரவு அலை இருந்தது எனக் கூறப்பட்ட தேர்தலில்கூட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க சிறு கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமானது.
மஹிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிகாலத்தில் ஒரு தரப்பு அரசியல் இருந்து வெளியேறி, காலை வாரியது. ஆனால் எதிரணியில் ஒரு தரப்பை இணைத்துக்கொண்டே மஹிந்த செயற்பட்டார். நல்லாட்சியின்போதும் சிறு கட்சிகளின் ஒத்துழைப்புடன்தான் ஆட்சி அமைக்கப்பட்டது.
எனவே, ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு, நாட்டின் பிரதானியாக பிரதமர் இருக்கும்போது ஆட்சியமைப்பதற்கு இவ்வாறு சிறு கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக அக்கட்சிகளின் கோரிக்கைக்கமைய செயற்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது நாட்டுக்கும், இந்நாட்டில் வாழும் பிரதான இனத்துக்கும் இழைக்கப்படும் அநீதியாக அமையும். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமெனில் பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்ககூடிய சூழ்நிலை உருவாகக்கூடிய வகையில் தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும்.” – எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!